வேகமாக பரவி வரும் நிமோனியா – சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு – வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!
Friday, December 8th, 2023கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவாக்கப்பட்ட சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள் அங்கு பரவியிருந்தது.
தற்போது அங்கு பாடசாலை மாணவர்களை நிமோனியா கடும் வேகமாக பரவி தாக்கி வருகின்றது. இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா போன்ற வைரஸ்களால் சீனா முழுவதும் உள்ள பாடசாலை குழந்தைகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா நேரத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கியதால் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்துள்ளதோடு தொலைபேசிக்கும் அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில் , சீனாவில் நிமோனியா பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் பாடசாலைகள் பல மூடப்பட்டுள்ளன. மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|