வெள்ளை மாளிகையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது!
Saturday, November 12th, 2016அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் எளிதாக செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, தற்போதைய நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற முடியாமல் இருந்த வருகிறது. இதனால், நிர்வாக ரீதியாக ஒபாமா நிர்வாகம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், பல முடிவுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கும் அவர்கள் கடுமையாகப் போராடும் நிலை இருந்தது.தற்போது, இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெற்றுள்ள வெற்றியை இந்தப் படத்தில் காணலாம்.
Related posts:
தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன்!
பேருந்து விபத்து : நேபாளத்தில் 25 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்து பிரதமர் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
|
|