வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – வெளியேறினார் அதிபர் ட்ரம்ப் !

Tuesday, August 11th, 2020

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார்.
வெள்ளை மாளிகை அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் நடமாடியள்ளார். இதனையடுத்து, இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப், உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: