வெள்ளப் பெருக்கில் சிக்குண்ட சீனா மக்களுக்கு நிவாரணம் – சீன ஜனாதிபதி!

Thursday, July 6th, 2023

வெள்ளப் பெருக்கில் சிக்குண்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சீன ஜனாதிபதி (Xi Jinping) அழைப்பு விடுத்துள்ளார்.

தென்மேற்கு சீனாவின் Chongqing பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்கலாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாதத்தின் இறுதி வரையில் மழையுடனான சீரற்ற வானிலை நிலவும் என அந்த நாட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு 400 அவசரகால குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

000

Related posts: