வெளிநாடு வாழ் இந்தியர்கள்  பழைய இந்திய நாணயத்தாள்கள் மாற்ற ஜூன் மாதம் 30-ஆம் திகதிவரை அவகாசம்!

Sunday, January 8th, 2017

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜூன் மாதம் 30-ஆம் திகதிவரை பழைய இந்திய  நாணயத் தாள்களை இந்திய ரிசர்வ் வங்கிகளில் செலுத்தி புதிய நாணயத்தாள்களை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளிநாடுவாழ் இந்தியர் நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் வசித்துவரும் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்தச் சூழலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இத்தகைய சலுகையை இந்திய அரசாங்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிநாட்டலுவல்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றை  விடுத்திருப்பதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது

அதில் அமைச்சு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 2015-இன் படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தலா ரூ.25,000 மட்டுமே கொண்டுவர முடியும்.

அந்த விதிமுறைகளின்படியே இந்திய ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செல்லாத உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

உயர்மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அதற்கு மறுநாளில் இருந்து டிசம்பர் 30-ஆம் திகதி வரை வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பும் இந்தியர்கள் மார்ச் 31-ஆம் திகதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.

நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்புவர்களுக்கும் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் பொருந்தும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

1ea8dc666d4055906a0959c80efa6799_XL

Related posts: