வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய தடை விதித்தது மலேசியா

Sunday, March 13th, 2016

மலேசியாவில் வங்காளதேசத்தை சேர்ந்த 15 லட்சம் பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாக வெளியான தகவலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து புதிய தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்ய மலேசியா தடை விதித்துள்ளது. மலேசியாவின் இந்த முடிவு இலங்கை, இந்திய தொழிலாளர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி மலேசியாவின் உள்துறை மந்திரியும், துணை பிரதமருமான அகமது சாகித் ஹமீதி கூறியதாவது:-

நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய விரும்பினால் ஏற்கனவே உள்நாட்டில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை மட்டுமே தேர்வு செய்யலாம். புதிதாக வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு தேர்வு செய்யக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை மட்டுமே அதிகம் கொண்டிருப்பது சரியல்ல. ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் சட்டமுறைப்படி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு “வேக் பொமிட்” இல்லாமல் இருந்தாலோ அல்லது காலாவதியாக இருந்தாலோ அதை முறைப்படி அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
என அவர் தெரிவித்தார்.

Related posts: