வெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்!
Monday, May 16th, 2016தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகளில் ஒன்றான வெனிசுலா, பெட்ரோல், டீசல் விலை சரிவு காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் உணவுப் பற்றாக்குறையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்பைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராகவும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார். எந்தவொரு சூழலையும் சமாளிக்க தயாராகும் வகையில் வெனிசுலா ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெரும் தொழிற்சாலைகள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
Related posts:
|
|