வெடித்து சிதறிய படகு – 13 பேர் காயம்!

Wednesday, July 12th, 2017

ஜேர்மனியில் படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். North Rhine-Westphalian பகுதியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவத்தின் போது தீயணைப்பு வீரர்கள் படகு ஒன்றை அகற்றிக்கொண்டிருந்து போது எதிர்பாராத விதமாக படகு திடீரென பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. இதில் 12 தீயணைப்பு வீரர்கள், ஒரு பொலிசார் என 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெடிப்பதற்கு முன்னர் படகில் புகை மூலம் மெதுவாக தீ எரிந்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது. தீ காரணமாக படகில் இருந்த பேட்டரிகள் பயங்கரமாக வெடித்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வரை தெளிவற்றதாக இருப்பதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: