வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!

Thursday, September 27th, 2018

டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் மூன்று அடுக்குமாடி வீடு திடீரென்று இடிந்து விழுந்ததில், அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர்.

மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் மீட்கப்பட்டனர்.

சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: