விளாடிமீர் புடினுக்கு எச்சரிக்கை!
Tuesday, August 2nd, 2016
கடந்த ஒரு வார காலமாக நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பு, தற்போது ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி புடின் அவர்களே சற்று கவனியுங்கள், நாங்கள் ரஷ்யாவுக்கு வருகிறோம், அங்கு உங்கள் வீட்டில் வைத்து உங்களை கொலை செய்யப்போகிறோம் என்று கூறுகின்றனர். இந்த வீடியோ குறித்து ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்த வீடியோவானது இத்தீவிரவாதிகள் இதற்கு முன்னர் பயன்படுத்தி வந்த தளத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதற்காக, ரஷ்யாவை குறிவைத்துள்ளோம் என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை, இதற்கு முன்னர், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால், பதில் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் திடீரென ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|