விற்பனை செய்த கார்களை திரும்பப் பெறுகிறது மெர்சிடிஸ் பென்ஸ்!  

Friday, July 21st, 2017

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த 6 வருடங்களில் விற்பனை செய்த அனைத்து டீசல் ரக கார்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

கார்களின் உமிழ்வை சீரமைப்பதற்காகவே திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கார்களில் இருந்து நைட்ரஜன் ஒக்சைடு வெளியேறுவதைக் குறைக்கவுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த டையம்லெர் தெரிவித்துள்ளது.

இதை செய்து முடிக்க மொத்தம் €220 மில்லியன் செலவாகும், எனினும் வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.டீசல் என்ஜின் கொண்ட அனைத்து கார்களும் யூரோ 6 தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதால், புதிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

ஜெர்மனியில் மட்டும் 10 இலட்சம் வாகனங்களும், ஐரோப்பாவில் 20 இலட்சம் வாகனங்களும் உமிழ்வுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு லண்டனில் மட்டும் 170,000 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts: