விரைவில் அணு ஆயுத சோதனை: வடகொரியா மிரட்டல்

Wednesday, March 16th, 2016

அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை போன்றவை விரைவில் நடத்தப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது.

பல்வேறு முறை எடுத்துக் கூறியும் அந்நாடு தனது செயலில் இருந்து பின்வாங்கவில்லை.

இதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அணு ஆயுதத்தை சோதிக்க போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிங் ஜுங் உன் , இன்னும் குறுகிய காலத்தில் அணுஆயுத சோதனைகளை தொடங்க வேண்டும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் ஏவுகணை சோதனையை நடத்தவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வட கொரியாவின் இந்த சோதனைகள் சுய அழிவுக்கு வழி வகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது


தற்கால அடிமை முறையை அகற்ற பிரித்தானிய பிரதமர் தீவிரம்!
அதிர்ஷ்டவசமாக நடுவானில் விமானங்கள் மோதிக்கொள்வது தவிர்ப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!
ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை!