விரைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்!

Friday, September 9th, 2016

மக்கள் தீர்ப்பளித்ததற்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரீசா மேவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

இலண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.

எனினும், தற்போது தெரீசா மேயின் கையில் தான் முடிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்லோவாக்கியாவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக வேண்டும் என்று வாக்களித்த பிறகு பிரித்தானியா இல்லாமல் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

150909174111_european_commission_president_jean-claude_juncker_announces_asylum_seekers_quota_ap_512x288_ap_nocredit

Related posts: