வியட்நாமுக்கு அரை பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !

Sunday, September 4th, 2016

வியட்நாமின் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை இந்தியா வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார்.

பதினைந்து ஆண்டுகளில முதல் முறையாக இந்திய பிரதமர், ஹனோய்க்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் வெளியாகியிருக்கும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத் தொடர்களில் மிகவும் முக்கியமானது இந்த அறிவிப்பு.

 “கிழக்கு செயல்பாடு” கொள்கை திட்டம் என கூறப்படும் இந்திய அரசின் பரந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக இது ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவாக்க இந்தியா விரும்புகிறது.

140915105017_vietnam_india_624x351_elvis_nocredit

141028125513_india_vietnam_640x360_afp

Related posts: