விமான விபத்து:27 பேர் பலியான தகவல் பொய்யானது!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று சைபிரியாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேர் கடும் காயத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
குறித்த IL-18 எனும் விமானம் இன்று (19) அதிகாலை சைபிரியாவின் யகுடாய் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு குறித்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளதோடு, 32 பயணிகள் மற்றும் 7 விமான சேவை பணியாளர்கள் பயணித்த குறித்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து 16 பேர் கடும் காயத்திற்குள்ளாகியதாகவும் 7 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
காலநிலை சீரற்ற தன்மை காரணமாக அவசர தரையிறக்கத்திற்குள்ளான குறித்த விமானம் 3 துண்டுகளாக உடைந்துள்ளது.
இதனையடுத்து, மீட்புப் பணிகளுக்காக அவ்விடத்திற்கு MI ரக ஹெலிகொப்டர்கள் மூன்று அனுப்பட்டதாக ரஷ்ய அவசரகால அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விமானம், நிரற்படுத்தப்பட்ட சேவையிலுள்ள ரஷ்யாவின் கன்ஸ்க் (Kansk) நகரிலிருந்து அந்நாட்டின் மற்றுமொரு நகரான ரிக்சி (Tiksi) நகரை அடைவதற்கு 30 கிலோ மீற்றர்கள் இருந்த நிலையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|