விமான விபத்து தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புதின்!

Monday, December 26th, 2016

ரஷ்யாவுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று கருங்கடலில் விழுந்து நொறுங்கிய விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் புதின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சோச்சி நகரிலிருந்து சிரியாவை நோக்கி புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலே நொறுங்கி விழுந்தது.  அந்த விமானத்தில் பயணித்த 90க்கும் அதிகமானோர் உயிர் தப்பவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை இடையே நிகழ்ந்த உரையாடல் போன்று தோன்றும் ஒன்றை ரஷ்யா தொலைக்காட்சி ஒளிப்பரப்பி காட்டியுள்ளது.

அந்த விமானம் மாயமாகும் வரை அது எவ்விதமான சிரமங்கள் எதிர்கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் பதிவாகவில்லை. அதில் வந்த அனைத்து குரல்களும் அமைதியாகவே இருந்தன.

அந்த விமானத்தில் பயணித்த பெரும்பாலானவர்கள், இராணுவத்தின் பிரபல இசைக்குழுவான அலெக்ஸ்சாண்ட்ரோவ் என்செம்பிள் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

viladimir putin

Related posts: