விமான விபத்து – கென்யாவில் 5 பேர் உயிரிழப்பு!

Thursday, February 14th, 2019

கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.

விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகிறது.

மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: