விமான விபத்தில் மூவர் பலி!

Wednesday, July 18th, 2018

அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் விமானப்படை பயிற்சி மையத்தில், பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மூவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா செஜ்வால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜோர்ஜ் சன்ஜேஸ், ரால்ப் நைட் ஆகியோர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts: