விமானியின் மறதியால் 5 மணி நேரம் தாமதம்!  

Thursday, August 11th, 2016

விமானி ஒருவர் தனது பாஸ்போர்ட்டை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்ததால் சுமார் 5 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

ஐதராபாத்தில் இருந்து டாமன் செல்லக்கூடிய ஜெட் ஏர்வேஸ் என்ற விமானம் பைலட்டிற்காக காத்து இருந்தது. நேரம் செல்ல செல்ல விமானம் புறப்பட தாமதம் ஆனது. இது குறித்து அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டனர். அதற்கு டாமனில் விமானத்திற்கான இடம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறி பயணிகளை சமாளித்தனர்.

இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 10.20க்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் இடைப்பட்ட நேரத்தில் பைலட் பெங்களூருவில் மறந்து வைத்துவிட்டு வந்த பாஸ்போர்ட்டை, விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு வரச்செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.இதனால் பயணிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தை இயக்க வேண்டிய விமானி உரிய நேரத்துக்கு வராததால் மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடுவின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

Related posts: