விமானம் நொருங்கி விழுந்து ஐவர் பலி!

Friday, June 29th, 2018

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் திடீரென சிறிய ரக விமானம் நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

மும்பை – காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் ஒன்று நொருங்கி விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

குறித்த விபத்தில், விமானத்தில் இருந்த 2 விமானிகள், 2 பொறியிலாளர்கள் மற்றும் தரையில் இருந்த நபர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: