விமானம் தரையிறங்கிய போது விபரீதம் : மயிரிழையில்உயிர்தப்பிய 163 பயணிகள்!

Sunday, May 15th, 2016

மும்பை விமான நிலையத்தில் ஜேர்மனியின் லுப்தான்சா விமானம் தரையிறங்கிய போது விமானத்தின் ரயர் வெடித்த சம்பவத்தில் அதில் இருந்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஜேர்மன் தேசிய விமான நிறுவனமான லுப்தான்சா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் நேற்று முன் தினம் இரவு மும்பைக்கு வந்தது.

அப்போது விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் 4 ரயர்கள் வெடித்தன. ஆனாலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சரியான இடத்தில் நிறுத்தினார்.

இதில் விமானத்தில் இருந்த 163 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து நடந்த ஓடுபாதையை பயன்படுத்த முடியாததால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இந்த சம்பவத்தால் மும்பையில் இருந்து முனிச் நகருக்கு நேற்று புறப்பட்டுச் செல்லக்கூடிய லுப்தான்சா விமானமும் ரத்து செய்யப்பட்டது.

Related posts: