விமானத்தை கடத்துவதாக அரேபிய மொழியில் கடிதம் –  அச்சத்தில் விமானம் தரையிறக்கம்!

Tuesday, October 31st, 2017

இந்தியா – டெல்லியில் இருந்து மும்பை நோக்கி பயணித்த ஜெட் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 9 டபிள்யூ 339 என்ற விமானம் அவசரமாக அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விமானத்தின் கழிவறையில் விமானத்தை கடத்துவதாக தெரிவித்து அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த விமானம் அவசரமாக அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மும்பை செல்வேண்டிய பயணிகள் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: