விமானங்களுக்கு இடையூறாகவிருந்த நாய் நியூசிலாந்தில் சுட்டுக்கொலை!

external Sunday, March 19th, 2017

நியூசிலாந்தின் ஆக்லேண்ட் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடையூறாக இருந்த பொலிஸ் மோப்ப நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நாயை பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றதன் பின்னர் விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.

பத்து மாத வயதான குறித்த நாய்க்குட்டிக்கு வெடிபொருட்களைக் கண்டறிய பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஆக்லேண்ட் விமான நிலையத்தின் ஓடுதள பகுதிக்குச் சென்று ஒடுபாதையில் அலைந்து திரிந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.நாய்க்குட்டியை மீண்டும் அழைத்துவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அந்த நாய் மிகவும் மன உளைச்சலில் இருந்ததால் யாரும் அதை நெருங்க முடியவில்லை. எவ்வாறாயினும், விமானப் பயணங்களைக் கருத்திற்கொண்டு நாயை பொலிஸார் சுட்டுக்கொல்லத் தீர்மானித்துள்ளனர்.


நான்கு மாதங்களின் பின் பிரான்ஸ் தாக்குதல் சூத்திரதாரி கைது!
ஐரோப்பாவிலிருந்து விலகும் டொனால்ட் டரம்ப்! கடுமையாக எச்சரிக்கும் நேட்டோ!
அகதியை எட்டி உதைத்த ஹங்கேரி பெண் செய்தியாளருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை!
ஆட்சியமைக்கிறார் பழனிசாமி: 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு!
முடங்கிப் போன பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை!