விமானங்களுக்குக் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!

குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு விமானங்கள், பெல்ஜியத்தின் பிரஸல்ஸிலுள்ள ஸவென்டெம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம், பெல்ஜிய நேரப்படி புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
பெல்ஜியத்தின் அரச வழக்குத் தொடருநரின் அலுவலகத்துக்குக் கிடைத்த குண்டு தொடர்பான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அது குறித்து விமானங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. எனினும், குண்டு செயலிழக்கும் பிரிவினர், அங்கு அனுப்பப்படவில்லை எனவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர் ஒருவரின் கருத்தின்படி, விமானம் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்பதாக, விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர், 10 நிமிடங்களாக, விமானத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ப்ரஸல்ஸ் விமான நிலையத்திலும் ரயில் நிலையத்திலும், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், 32 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|