விடுதலைக்கான வாக்கெடுப்புச் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு!

Saturday, June 25th, 2016

பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் விருப்பதற்கு எதிராக அதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே கொண்டு வருவது ஜனநாயக ரீதியில் ஏற்றுகொள்ள முடியாதது என்று அவர் கூறியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்து விடுதலை பெறுவதற்கு எதிராக வாக்களித்தபோது நிலைவிய சூழ்நிலைகளில் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு அர்த்தப்படுத்துகிறது. அதனால், புதிய வாக்கெடுப்பு நியாயமானதே என்று ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.

வட அயர்லாந்தில் பெரும்பாலானேர் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதைத் தெரிவு செய்திருக்கையில், அயர்லாந்து குடியரசோடு அது ஒன்றுபடவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாதம் வலுப்பட்டிருக்கிறது என்று அந்த மாகாணத்தின் மிக பெரிய தேசியவாத கட்சியான ஷின் ஃபெயின் தெரிவித்திருக்கிறது

Related posts: