வாழ்நாள் முழுவதும் சீன ஜனாதிபதி இருக்கவுள்ள சீன ஜனாதிபதி!

NP_20180306_XI06_3811914 Monday, March 12th, 2018

சீன ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் தவணை காலத்தை நீடிக்கும் வகையிலும் தற்போதைய ஜனாதிபதி ஷி ஜின்பின் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கும் வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் சீன குடியரசின் காங்கிஸ் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 964 காங்கிரஸ் உறுப்பினர்களில் இரண்டு பேர் மாத்திரமே இந்த அனுமதிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மூன்று பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதற்கு அமைய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட அரசியல் திருத்தம் இதுவென பதியப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சீன ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் இரண்டு தவணைகள் மாத்திரமே அந்த பதவியில் வகிக்க முடியும். 10 ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது முறையாக அந்த பதவிக்கு போட்டியிட முடியாது என ஏற்கனவே அரசியலமைப்பு திருத்தம் ஒன்று கடந்த 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மாற்றும் வகையில் இந்த புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் சீன குடியரசை உருவாக்கிய மாவோ சேதுங் அவர்களின் பின், சீனாவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, உலகில் பலம்மிக்க நாடாக மாற்றிய ஷி ஜின்பின் தொடர்ந்தும் சீனாவில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என அந்நாட்டில் பலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.