வாழ்க்கை செலவு குறைந்த நாடாக இந்தியா தெரிவு!

Tuesday, September 13th, 2016

உலகளாவிய ரீதியில் குறைந்த செலவில் வாழக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய வாழ்கை செலவின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் சில நாடுகளின் மாதாந்த செலவு வேறு பல நாடுகளின் பல மாதங்களுக்கான செலவாக காணப்படுகின்றது. அவ்வாறான நாடுகளில் உள்ள பொருட்களின் விலை மிகவும் மலிவாக உள்ளமையே அதற்கு காரணமாகும்.

அந்த வகையில் உலகில் வாழ்வதற்காக குறைந்த செலவுடைய நாடாக இந்தியா காணப்படுகின்றது. குறைந்த வாழ்க்கை செலுவுடைய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 21ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்த அறிக்கையின் ஊடாக இலங்கை 3 மாத வாழ்க்கை செலவு அவுஸ்திரேலியாவின் ஒரு மாத செலவிற்கு சமம் என கண்டறியப்பட்டுள்ளது.

முதல் பத்து இடங்களில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், துன்சியா, அல்ஜிரியா, மொல்டோவா, எகிப்து, மசிடோனியா, சிரியா, கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.

625.0.560.320.160.600.053.800.668.160.90-1029-310x165

Related posts: