வாலிபரின் அத்துமீறல் – மூடப்பட்டது ஈஃபில் டவர்!

Tuesday, May 21st, 2019

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த ஈஃபில் டவர், நேற்று(20) ஒரு வாலிபரால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த டவரில் வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி, அதன் உச்சியினை அடைய வேண்டும் என்கிற முனைப்புடன் ஏற தொடங்கியுள்ளார். அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கிருந்த சில சுற்றுலா பயணிகள் கண்டுள்ளனர்.

உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து ஈஃபில் டவருக்கு வந்த அவர்கள், சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அந்த வாலிபர் 149 மீட்டர் அதாவது 488 அடி உயரத்திற்கு கிடுகிடுவென ஏறிவிட்டார்.

சுற்றுலா பயணிகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவவே, ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படும் என கூறினர். ஆனால், பார்வையாளர்கள் திரும்பிச் செல்ல மனமில்லாமல், அதிகாரிகளிடம் திறக்குமாறு வலியுறுத்தினர். பாதுகாப்பு கருதி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த வாலிபரை 6 மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டு, போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஈஃபில் டவர் நேற்று(20) தற்காலிகமாக மூடப்பட்டது. டவர் மீண்டும் இன்று(21) உள்ளூர் நேரப்படி, 9.30 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Related posts: