வான் தாக்குதல் 8 அல்கொய்தாக்கள் பலி

Sunday, April 30th, 2017

ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏமனின் ஷப்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா வான் படையின் செய்தி தொடர்பாளர் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்தின் மத்திய பகுதியில் கார் வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

கர்ரடா என்ற பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.ஐ.எஸ். அமைப்பு பாக்தாத் நகரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றது. முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு இதே பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 320 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: