வான்தாக்குதலை முன்னதாகவே நிறுத்தியது ரஷ்யா!

Wednesday, October 19th, 2016

திட்டமிடப்பட்ட போர் நிறுத்தத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போவின் சுற்றுப்புறங்களில் விமானத் தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை நிர்ணயிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேரத்திற்குள் பொது மக்களும் போரிடுவோரும் அலெப்போவை விட்டு வெளியேறுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக, ரஷ்யாவும், சிரியாவும் குண்டு தாக்குதல்களை நிறுத்தியிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சர்கெ சொய்கூ தெரிவித்திருக்கிறார்.

அந்நகரத்தை விட்டு பின்வாங்குவதற்கு கிடைத்திருக்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கிளர்ச்சியாளர்களை வலியுறுத்த வேண்டுமென அவர்களிடம் செல்வாக்கு வைத்திருக்கும் நாடுகளிடம் சொய்கூ கேட்டுகொண்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் இவ்விடத்தை விட்டு செல்ல போவதில்லை என்றும், கிளர்ச்சிப் படைப்பிரிவுகள் தொடர்ந்து போரிடும் என்றும் எதிர்ப்பு குழு ஒன்றின் தளபதியான அக்ரார் அல்-ஷாம் தெரிவித்திருக்கிறார்.

_91975504_6afaa401-bd60-4365-82a2-24b211321017

Related posts: