வானூர்தி தாக்குதலில் 40 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!
Saturday, September 9th, 2017ரஷ்ய யுத்த வானூர்தி குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 40 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் நால்வர் சிரேஷ்ட தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
கொல்லப்பட்ட தீவிரவாத தளபதிகளில் ஒருவர் அபூ முஹமட் அல்-ஷிமாலி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ்இன் வெளிநாட்டு நடவடிக்கைளுக்கு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இரகசியமான இடமொன்றில் ஒன்று கூடுவது குறித்து கிடைத்த புலனாய்வு தகவலையடுத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகள் - துருக்கி இராணுவம் இடையே கடும் மோதல்!
அமெரிக்காவை முழுமையாக தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தயார் -வடகொரியா அதிபர்
மெரீனாவில் அண்ணாவின் வலது கையோராம் கலைஞரின் உடல் அடக்கம்!
|
|