வானிலை ஆய்வு மையத்தையும் பதம்பார்த்தது வர்தா புயல்!

சென்னை வானிலை ஆய்வு மைய கண்ணாடிகள் தற்போது வர்தா புயலினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் இருந்து 50 கி.மீ., மையம் கொண்டுள்ள அதிதீவிர வர்தா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்க துவங்கியுள்ளது.
இதனால் அங்கு 120 கி.மீ., முதல் 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. இது அவ்வப்போது 140 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது.இந்த பலத்த காற்றால் சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஈரான் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை!
2014 முதல் இலங்கையில் இருந்து 2,835 மீனவர்கள் விடுதலை - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் த...
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் - பல்வேறு நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்க...
|
|