வளர்முக நாடுகளை சேர்ந்த 17 கர்தினால்களை நியமித்தார் போப்!
Sunday, November 20th, 2016
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமித்துள்ளார்.
இந்த கர்தினால்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டோர் என்று கருதப்படும் மூன்று அமெரிக்க ஆயர்களையும் போப் பிரான்சிஸ் காதினால்களாக நியமித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கை, அமெரிக்க கர்தினால்களில் அதிக அளவில் பழமைவாத கொள்கைகளைக் கொண்டவர்கள் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை சமநிலையை உருவாக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
போப்புக்கு ஆலோசனை வழங்குவதோடு, இவருக்கு அடுத்த போப்பை தெரிவு செய்கின்ற கர்தினால் அவையில் இடம்பெறும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோரை போப் பிரான்சிஸ் தெரிவு செய்திருப்பதை இந்த புதிய நியமனங்கள் காட்டுக்கின்றன.
திருச்சபைக்கு ஆற்றிய பணிகளுக்காக 80 வயதுக்கு மேலான நான்கு ஆயர்கள் கர்தினால்களாக நியமிக்கப்பட்டு, அதற்கு அடையாளமான சிவப்பு தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், அல்பேனியாவில் கம்யூனிஸ ஆட்சியின்போது, தன்னுடைய இறை நம்பிக்கையை முன்னிட்டு இரண்டு தசாப்தங்களை சிறையில் கழித்த அல்பேனிய பாதிரியார் எர்னஸ்ட் சிமோனியும் அடங்கியுள்ளார்.

Related posts: