வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்!

Wednesday, January 18th, 2017

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏரளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் போராட்டம் மேலும் வலுவடைந்தவரவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே போல், மதுரை, அலங்காநல்லூர், திருநெல்வேலி, சேலம் போன்ற தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஏராளமானவர்கள் போராட்டம் வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு போராட்டக்கார்கள் தங்களது செல்போன்களில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தது.

இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எப்போதுவேண்டுமெனாலும் செல்லலாம் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் அவர் கூறினார். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_93642067_img-20170118-wa0068

Related posts: