வர்த்தக போரை தொடங்க வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும்’

Sunday, April 22nd, 2018

அமெரிக்கா வர்த்தக போரை தொடங்க வலியுறுத்தினால் சீனா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும், என அமெரிக்க சீன துாதர் குய் திங்காய் தெரிவித்தார்.

அமெரிக்க, சீனா நாடுகளிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக சுங்க வரிகளை விதித்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றன.

கூடுதல் சுங்க வரி விதிப்பால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் இருநாடுகளிடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது.சீன அமெரிக்க தூதர் குய் திங்காய்,கூறுகையில், ”அமெரிக்க- சீன உறவுக்கு இடையே வர்த்தக போர் ஒரு பிரச்னையாக உள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும்.ஆனால், வர்த்தக போரை தொடங்க அமெரிக்கா வலியுறுத்தினால், அதற்கு சீனா தக்க பதிலடி கொடுக்கும்” எனக் கூறினார்.

Related posts: