வருகிறது பதிய சட்டம்: ஆட்டம் காணுமா சமூக வலைத்தளங்கள்!

Thursday, January 4th, 2018

ஜேர்மனியில் கடந்த 2017 ஒக்டோபர் மாதம் தொடக்கம் Network Enforcement Act/NetzDG எனும் புதிய சட்டம் ஜேர்மனியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் இணைய தளங்களூடாக அவதூறான செய்திகளை பரப்புவதற்கு எதிரான சட்டமேயாகும்.

இதனடிப்படையில் சீண்டத்தக்க பேச்சுக்கள், அவதூறான செய்திகளை வெளியிடும், பரப்பும் சமூக வலை தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மூலமாக 50 மில்லியம் யூரோக்கள் தண்டம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24 மணி நேரத்திற்குள், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அவதூறான செய்திகளை உடனடியாக சமூக வலைதளங்கள் அகற்ற வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் தண்டத் தொகை செலுத்த வேண்டி நேரிடும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts: