வரம்பு மீறுகிறது ஈரான்: எச்சரிக்கும் டிரம்ப்!

Tuesday, July 2nd, 2019

உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், அனுமதிக்கப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை அதிகாரிப்பதாக ஈரான் திங்களன்று அறிவித்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு, இப்போது ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 300 கிலோ வரம்பை கடந்துவிட்டது என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு, 2015 ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் வரம்பை மீறியதாக உறுதிப்படுத்தியது.

இதுகுறித்த அமெரிக்கா ஜனாதிபதியிடம் கருத்து கேட்டபோது, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாருடன் விளையாடுகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உட்பட உலக சக்திகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, கடந்த ஆண்டே அமெரிக்கா வெளியேறியது நினைவுக் கூரதக்கது.

Related posts: