வட கொரிய ஜனாதிபதியை கொல்ல திட்டம்!

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்- ஐ தென் கொரியாவின் ரகசிய கொலையாளிகள் என கூறப்படும் சிறப்பு படையினர் கடத்தி கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது நண்பர்களை கடத்துவதற்காக தனது நாட்டின் சிறப்பு படைகளை வட கொரியாவுக்கு தென் கொரியா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரியா அதிபர் மற்றும் இராணுவ தலைவர்களை தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள்.
தென் கொரியாவின் சிறப்புப் படைகள் எல்லை தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றனர். கடற்பரப்பின் வழியாக இருந்து கூட தாக்குதல் நடத்தலாம் என்பதால் வட கொரியாவின் கடல் ரீதியான எல்லைப்பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனையால் தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள் கோபத்திற்கு ஆளாகியுள்ளதுவான்வழி, போர் கப்பல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தென் கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.தென்கொரியா தலைவர் Moon Jae-in- யிடம் இந்த திட்டம் குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் உதவியை எதிர்ப்பார்க்காமல் தென்கொரியா தன்னிச்சையாக இந்த திட்டத்தை தீட்டியுள்ளதுஜப்பான் கடல் மீது வடகொரியா ஏவுகணை சோதனை செய்த நிலையில், தென்கொரியா வெடிகுண்டு தாக்குதல் பயிற்சியை சமீபத்தில் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|