வட கொரியாவை புரட்டியெடுக்கும் வெள்ளம்: 133 பேர் பலி!

Monday, September 12th, 2016

வடகொரியாவில் கடந்த சில தினங்களாக  பெய்தவரும் கனமழை இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 395 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தால் சுமார் 35,500 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,07,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் மனிதநேய விவகாரங்களுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 70 வருடங்களில் இல்லாத பேரழிவை வடகொரியா தற்போது சந்தித்துள்ளது என்றும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

201609121632036033_North-Korea-flooding-kills-133-displaces-107000-UN_SECVPF.gif

Related posts: