வட கொரியாவுக்கான தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா!

Sunday, September 11th, 2016
மிகவும் சமீபத்தில் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. பாதுகாப்பு அவை ஆலோசித்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு கூடுதலான நடவடிக்கைகளாக இவை இருக்கும் என்று தூதர் சுங் கிம் கூறியிருக்கிறார். ஜப்பான் மற்றும் தென் கொரியாவோடு ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய செயல்பாடுகளையும் அமெரிக்கா கருத்தில் கொண்டு வருவதாக டோக்கியோவில் அதிகாரிகளை சந்தித்து வருகின்ற கிம் கூறியிருக்கிறார்.

வட கொரியா வெள்ளிக்கிழமை நடத்திய அணுகுண்டு சோதனை அந்நாடு இதுவரை சோதித்திருக்கும் 5 சோதனை முயற்சிகளில் மிகவும் சக்தி வாய்ந்த்தாக இருப்பதால், அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அந்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

160911043611_us_envoy_to_north_korea_sung_kim_624x351_afp

Related posts: