வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!

Sunday, September 4th, 2016

ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

துமென் நதியின் அருகில் அமைந்திருக்கும் ஹோர்யோங் நகரை சேர்ந்தவர்கள்தான் காணாமல் போயிருப்பதாக தேசிய செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது,

வட கொரியா, ரஷியா மற்றும் சீனாவின் எல்லையை ஒட்டி ஓடுகின்ற இந்த நதியின் கரைகள் வெள்ளிக்கிழமை உடைப்பெடுத்து, வட கெரிய எல்லைக்குள் அதிக சேதங்களை ஏற்படுத்தின.

பருவகால மழையும் வேகமான காற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதியில் 17 ஆயிரத்திற்கு மேலான வீடுகளை அழித்திருக்கின்றன.

160827143639_jharkhand_floods_raviprakash_640x360_raviprakash_nocredit

Related posts: