வடகொரியா சோதித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை- அமெரிக்கா !
Thursday, July 6th, 2017வடகொரியாவினால் சோதிக்கப்பட்ட ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம்பாயும் நெடுந்தூர அணு-ஏவுகணை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
வெற்றிகரமாக முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு-ஏவுகணையை சோதனை செய்திருப்பதாக வடகொரியா நேற்று அறிவித்திருந்தது. ஆனால் முதலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்த செய்தியை மறுத்தன.
தற்போது குறித்த ஏவுகணை நெடுந்தூர இயலுமைக் கொண்டது என்பதை அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் ஊடாக புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் அந்த நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. 1776ம் ஆண்டு ஜுலை மாதம் 4ம் திகதி அமெரிக்காவின் 13 குடியேற்றங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தியதை நினைவு கூறும் முகமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
|
|