வடகொரியா -அமெரிக்கா சந்திப்பு இரத்து – கொரிய தீவகற்பத்தில் பதற்றம்!

Friday, May 25th, 2018

எதிர்வரும் ஜுன் மாதம் சிங்கபூரில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடன் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

வடகொரியாவின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் வடகொரியா தமது செயற்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தினால் இந்த சந்திப்பு மீள இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு லிபியாவிற்கு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஒத்ததான யோசனை ஒன்று வடகொரியாவிற்கும் முன்வைக்கப்படும் என்று, அமெரிக்காவின் உப ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை அடுத்து, வடகொரியா இந்த சந்திப்பு தொடர்பில் ஐயத்தை வெளிப்படுத்தியது.

இதேவேளை அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கின்றமை தொடர்பிலும் வடகொரிய அதிருப்தியை வெளியிட்டது. இந்தநிலையிலேயே குறித்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts: