வடகொரியா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2017

வடகொரியா அரசாங்கம் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள  வடகொரியாவின் அரச ஊடகம்  அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத தாக்குதல்களை நடத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.

 அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்நோக்கத் தயார் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிரிகளின் அனைத்து நடமாட்டங்களையும் படையினர் கண்காணித்து வருவதாகவும் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

கொரிய குடாநாட்டில் அண்மைய நாட்களில் கடுமையான பதற்ற நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: