வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அழித்ததற்கு சீனாவின் முயற்சியே காரணம் – ரஷ்யா!

Monday, May 28th, 2018

சீனாவின் முயற்சி தான் அணுஆயுதத்தை அழிப்பது தொடர்பான வடகொரியாவின் முடிவை முன்னெடுக்க உதவி செய்தது, என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதின் பேசியதாவது,”ரஷ்யா – சீனா இடையே உள்ள உறவை மறுவடிவம் செய்ய தேவையில்லை. சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள கூட்டுறவு வரலாற்றில் மிக சிறப்பு வாய்ந்தது.சீனா எங்கள் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக உள்ளது.

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சீனாவுடன் 86 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்பை வைத்துள்ளோம்.சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட முடிவுகள், ரஷ்யா சீனா இடையே நிலவும் உறவுகளை நிலைத்தன்மை உடைய தாக்கியுள்ளது.

இந்த முடிவுகள் தற்போதைக்கு மட்டுமில்லாமல் எதிர்காலத்துக்கு சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.சீனாவின் முயற்சியிதான் அணுஆயுத அழிப்பது தொடர்பான வடகொரியாவின் முடிவை முன்னெடுக்க உதவி செய்தது என்று பாராட்டு தெரிவித்தார்

Related posts: