வடகொரியாவிற்கு அமெரிக்கா நிதியுதவி!
Sunday, May 13th, 2018வடகொரிய தமது அணு ஆயுதங்களை கையளிக்க முன்வந்தால் தாங்கள் வடகொரியாவிற்கு நிதியுதவிகளை வழங்க தயாரென அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அமெரிக்கவெளியுறவுத்துறை செயலாளர் மைக் பம்ப்யோ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொண்ட அணு ஆயுத பரிசோதனைகளை கைவிட்டு உலக நாடுகளுடன் இணக்கமான நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை வடகொரியாமேற்கொண்டு வருகின்றது.
இதன் முதற் கட்டமாக அண்மையில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் தென் கொரிய உயர் மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அத்துடன் அடுத்தகட்டமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா தமது குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
Related posts:
வாக்குச் சீட்டு மூலமே தேர்தலை நடத்த வேண்டும் -அமெ.முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் !
சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் - மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு!
இலங்கை போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நா...
|
|