வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை !

Friday, December 1st, 2017

வடகொரியாவினால் மீண்டும் ஏவுகணை சோதனை செய்யப்பட்டமை தொடர்பில், சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதி சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்திருந்தது.இது சுமார் 1000 கிலோமீற்றர்கள் வரையில் பயணித்திருந்ததாக கூறப்படுகிறது.மேலும் இதன்மூலம் முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்க முடியும் என்றும், வடகொரியா அறிவித்திருந்தது. இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் ஜனாதிபதி சி ஜிங்பின்னை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது வடகொரியா தமது ஏவுகணை சோதனைகளை நிறுத்தச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப், சீன ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

Related posts: