வங்கதேசத்தில் பேராசிரியர் வெட்டிக் கொலை
Sunday, April 24th, 2016வங்கதேசத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டின் வட மேற்கு நகரான ராஜ்ஷாகியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய ரெசாவுல் கரீம் சித்திக்கி, பணிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது, அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் உள்ளூரில் ஒரு இசைப்பள்ளியை நிறுவி, இலக்கிய பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில், மதச்சார்பற்ற மற்றும் நாத்திகக் கொள்கைகளை வலையத்தளங்களில் முன்னெடுத்துவந்த பல எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டனர்.
எனினும் பேராசிரியர் சித்திக்கி மதத்துக்கு எதிராக பேசவோ எழுதவோ இல்லை என செய்திகள் கூறுகின்றன.
Related posts:
அதிக மன அழுத்தத்தால் அவதியுறும் விமானிகள் - ஆய்வில் தகவல்!
பிரெக்ஸிட் விவகாரம் - பிரிட்டன் வெளியேறுவதற்கான திகதியில் மாற்றம்!
இஸ்ரேல் அழிக்கப்படும் - இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது - ஈரான் உயர் தலைவர் அயதுல...
|
|