லிப்ட் அறுந்து விழுந்து விபத்து – தென்கொரியாவில் மூவர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 03 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
கட்டிடத்தின் 15-வது மாடியில் 6 பேர் கீழே இறங்குவதற்காக லிப்டில் ஏறினர். சற்றும் எதிர்பாராத வகையில் குறித்த லிப்ட் அறுந்து 15-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்தோனீஷியாவை குற்றஞ்சாட்டுகிறது சீனா!
அரசியல் தீர்வே சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும்: சீன தூதுவர்
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – இந்தோனேசியாவில் பதற்றம்!
|
|