லிபியா மீதான ஆயுதத் தடையை நீக்க வல்லரசுகள் ஆதரவு!

Tuesday, May 17th, 2016

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவை எதிர்த்துப் போராட லிபியாவின் அரசுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும் இதர உலக வல்லரசுகளும் தெரிவித்துள்ளன.

லிபியாவுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு இருக்கும் ஐ நா தடையில் சில விதிவிலக்குகளை அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும் என அந்த சர்வதேசக் கூட்டமைப்பு, இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ நா ஆதரவுடன் லிபியாவில் செயல்படும் ஒற்றுமை அரசுடன், ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகள் வியன்னாவில் நடத்திய பேச்சுகளுக்கு பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்தப் பேச்சுகள் நடைபெறுவதற்கு முன்னர், இப்படியான பேச்சுவார்த்தைகள் லிபியாவை இணைக்குமா என்பது குறித்து ஜெர்மனி தனது சந்தேகங்களை எழுப்பியது.

Related posts: